செந்துறை நூலகத்திற்கு சொந்தமான இடத்தை மீட்கக்கோரி மனு
செந்துறை நூலகத்திற்கு சொந்தமான இடத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித்திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார். இதில் செந்துறை கிளை நூலக கவுரவ தலைவர் கணேசன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
செந்துறையில் கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் அப்பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள், படித்த இளைஞர்கள் பலர் வந்து பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் அந்த கிளை நூலகத்தை விரிவு படுத்த அரசு சார்பில் 2 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து அந்த இடம் எனக்குதான் சொந்தம் என அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அரசுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
விரிவுபடுத்த வேண்டும்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அந்த இடம் இன்னும் மீட்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தை கிளை நூலகத்திற்கு மீட்டுத் தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து கிளை நூலகத்திற்கு சொந்தமான அந்த இடத்தை மீட்டுத்தந்து நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர் பாலாஜி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஏழுமலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story