செங்கல்பட்டில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் கலெக்டர் பங்கேற்பு


செங்கல்பட்டில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-10T22:51:25+05:30)

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடந்தது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கலை அரங்கத்தில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், திருமண உதவி தொகை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, பசுமை வீடு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 310 மனுக்கள் பெறப்பட்டன.

இதனை பெற்றுக்கொண்ட மாட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

கூட்டத்தில் செங்கல்பட்டு வருவாய் கோட்டம் சாலை விபத்தில் இறந்த 5 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் காசோலையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவி தொகையான ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டது.

மேலும் மதுராந்தகம் வட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்படடோர், ஊனமுற்றோர் உதவி தொகைக்கான ஆணையும், செங்கல்பட்டு திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் 30 பயனாளிகளுக்கு இருளர் சாதி சான்றுகளும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, (சமூக பாதுகாப்பு திட்டம்) தனித்துணை கலெக்டர் ஜெயதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் லலிதா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story