மாவட்ட செய்திகள்

டெல்லியை போல மராட்டியத்திலும் வன்முறை நடக்க பா.ஜனதா விரும்பியது சிவசேனா குற்றச்சாட்டு + "||" + BJP wanted the violence in Maratham too Shiv Sena allegation

டெல்லியை போல மராட்டியத்திலும் வன்முறை நடக்க பா.ஜனதா விரும்பியது சிவசேனா குற்றச்சாட்டு

டெல்லியை போல  மராட்டியத்திலும் வன்முறை நடக்க பா.ஜனதா விரும்பியது  சிவசேனா குற்றச்சாட்டு
டெல்லியை போல மராட்டியத்திலும் வன்முறை நடக்க வேண்டும் என பா.ஜனதா விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.
மும்பை, 

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மகா விகாஸ் கூட்டணி, 100 நாள் ஆட்சியை நிறைவு செய்ததை அடுத்து அயோத்தி சென்று ராமரை வழிபட்டார். இந்தநிலையில் அயோத்தி சென்று வந்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ‘போலி வேடம் போடுபவர்' என பா.ஜனதா விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு சிவசேனா சாம்னாவில் பதிலடி கொடுத்து உள்ளது. இதுகுறித்து சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அயோத்தி பயணம் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கும் பா.ஜனதா தான் உண்மையில் போலி வேடம் போடுகிறது. உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதை ஏற்று கொள்ள முடியவில்லை.

டெல்லியை போல...

மராட்டிய பா.ஜனதா தலைவர்கள் உத்தவ் தாக்கரேயை விமர்சிப்பதில் இருந்து அவர்களின் தீய நோக்கங்கள் அம்பலப்படுகின்றன. காங்கிரசுடன் கைகோர்த்த போதும் சிவசேனா இந்துத்வா கொள்கையில் இருந்து தூரமாக செல்லவில்லை. இதனால் தான் எதிர்க்கட்சியினர் (பா.ஜனதா) தடுமாற்றத்தில் உள்ளனர்.

கூட்டணி கட்சியினர் வேறுபட்ட கொள்கைகளை கொண்டு இருக்கலாம். ஆனால் மக்கள் சேவையில் ஈடுபட்டு, மனிதர்களை சமமாக நடத்த வேண்டும். அதை தான் ராமர் பின்பற்றினார். நாங்களும் தற்போது அதை தான் பின்பற்றுகிறோம். குடியுாிமை திருத்த சட்ட விவகாரத்தில் டெல்லியை போல மராட்டியத்திலும் வன்முறை நிகழ வேண்டும் என எதிர்க்கட்சி (பா.ஜனதா) விரும்பியது. ஆனால் உத்தவ் தாக்கரே அந்த பிரச்சினையை கவனமாக கையாண்டு சிறிய சம்பவம் கூட நடக்காமல் பார்த்து உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,930 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.91 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
2. மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 5,544 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.80 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
3. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 5,965 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.76 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்தது
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது.
5. மராட்டியத்தில் 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று 4,153 மேலும் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.