கரூரில் விழிப்புணர்வு முகாம்


கரூரில் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 11 March 2020 10:30 PM GMT (Updated: 11 March 2020 3:49 PM GMT)

கரூரில் பேரிடர்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கரூர், 

கரூர் மாவட்ட வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மழை, வெள்ளம், புயல், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், கரூர் அட்லஸ் கலையரங்கில் நடந்தது.

இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசுகையில், மழை காலங்களில் சாலையிலோ, காவிரி ஆற்றங்கரைகளிலோ தண்ணீர் கரைபுரண்டு ஓடும்போது அதன் வேகத்தை அறியாமல் கடக்க கூடாது. கொரோனா வைரசானது காற்றில் பரவக்கூடியது அல்ல. மாறாக தொடுதலால் பரவக்கூடியதாகும்.

நாம் அன்றாடம் பல்வேறு காரணங்களுக்காக வெளியில் செல்லும்போது பயன் படுத்துகின்ற கழிப்பறைகள், கைகழுவும் இடங்கள், இருக்கைகள் என நாம் தொடும் நிலையில் உள்ள அனைத்து இடங்களையும்தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தொற்று உள்ள ஒருவர் பயன்படுத்திய பொருட்களில் சுமார் 48 மணி நேரத்திற்கு இந்த வைரஸ் உயிருடன் இருக்கும். எனவே நாம்எப்போதுமே கைகளை சுத்தமாக கழுவிவிட வேண்டும் என்றார்.

தீ விபத்து, மழை வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர்களின்போது தற்காப்பு நடவடிக்கைகளை எவ்வாறு செயல்படுத்துவது? என்பது பற்றி தீயணைப்புத்துறை யினர் ஒத்திகை மூலம் செயல்விளக்கம் அளித்தனர். இதில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story