சித்தாமூர் ஒன்றியத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


சித்தாமூர் ஒன்றியத்தில்   கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 March 2020 9:55 PM GMT (Updated: 2020-03-12T03:25:42+05:30)

சித்தாமூர் ஒன்றியத்தில் கலெக்டர் ஜான் லூயிஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுராந்தகம், 

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சியில் ரூ.23 லட்த்து 70 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மெட்ரிக் டன் கொள்ளளவு திறன் கொண்ட நுண்ணுயிர் மேலாண்மை மைய கட்டிடத்தை திடீர் ஆய்வு செய்தார்.

சோத்துப்பாக்கம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்படும் வீடு மற்றும் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகளை பார்வையிட்டார்.

கீழ் மருவத்தூர் ஊராட்சியில் நடைபெற்று வரும்மண்புழு உரம் தயாரித்தல் பணி மற்றும் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானங்களை ஆய்வு செய்தார்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில்...

மழுவங்கரணை ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் செலவில் பள்ளி சுற்றுச் சுவர் மற்றும் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்படும் சாலை பணிகளை பார்வையிட்டார். பொலம்பாக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நர்சரி பணிகளை ஆய்வு செய்தார். பூங்குனம் ஊராட்சியில் பிரதம மந்திரி் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 44 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது மதுராந்தகம் வருவாய் ஆர்.டி.ஓ. செல்விபிரியா, உதவி செயற்பொறியாளர் ராஜவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, நிர்மலன், ஒன்றிய பொறியாளர்கள் பிரேம் சுந்தர், ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர்கள் செந்தில்குமார், மலர்விழி, குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story