கோவில்பட்டி அருகே ரூ.1.05 கோடியில் புதிய போலீஸ் நிலையம் திறப்பு விழா


கோவில்பட்டி அருகே ரூ.1.05 கோடியில் புதிய போலீஸ் நிலையம் திறப்பு விழா
x
தினத்தந்தி 12 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-12T18:21:05+05:30)

நாலாட்டின்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய போலீஸ் நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றினார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் நாற்கர சாலையோரம் செயல்பட்ட போலீஸ் நிலையம், சாலை விரிவாக்க பணிக்காக வானரமுட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 

தொடர்ந்து நாலாட்டின்புத்தூரில் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் புதிய போலீஸ் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நாலாட்டின்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய போலீஸ் நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றினார்.

விழாவில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பார்வையிட்டார்.

Next Story