12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்கக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்கக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-13T18:07:48+05:30)

12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள் 

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வேண்டும். அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் தொடங்க வேண்டும். இதுகுறித்து நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் 

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி அருகே அய்யனேரியில் நேற்று பொதுமக்கள் தங்களது வீடுகள், தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, பொதுச்செயலாளர் பரமேசுவரன், இளையரசனேந்தல் பிர்கா மீட்பு குழு தலைவர் முருகன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் அய்யலுசாமி, முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் பாலமுருகன், வீரன் அழகுமுத்துகோன் நலச்சங்க பொருளாளர் கார்த்திக் குமார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story