விடுமுறை நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு
விடுமுறை நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் நேற்று ஒருசில மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளியில் இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் இளவரசன் பள்ளி விடுமுறை என்று தெரிவித்ததோடு, மாணவ- மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து சுத்தமாக கை கழுவ வேண்டும் என்று மாணவ- மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

Related Tags :
Next Story