கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்


கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 17 March 2020 12:00 AM GMT (Updated: 16 March 2020 8:19 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் இல்லை. மேலும் அது வராமல் தடுக்கும் வகையில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடும் நடவடிக்கை

சுற்றுலா மேற்கொள்ளும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்திகளை யாரும் பரப்பக்கூடாது. இதுகுறித்து தவறான வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருமி நாசினி தெளிக்கும் பணி

முன்னதாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இந்த பணியை கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.


Next Story