பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘‘சீல்’’ வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை


பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘‘சீல்’’ வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 March 2020 5:00 AM IST (Updated: 18 March 2020 12:22 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் ‘‘சீல்’’ வைத்தனர்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இந்த வணிக வளாகங்களில் பல கடைகளுக்கு குத்தகை தாரர்கள் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்தனர்.

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பையா உத்தரவின் பேரில் நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், மேலாளர் பாஸ்கரன், துப்புரவு அலுவலர் ஸ்டீபன் அந்தோணி, துப்புரவு ஆய்வாளர் அறிவழகன், நகர் அமைப்பு ஆய்வாளர்கள், சிறப்பு ஆய்வாளர்கள் ஆகியோர் பட்டுக்கோட்டை வணிக வளாகங்களில் வாடகை வசூல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது ஒரே நாளில் ரூ. 20 லட்சம் வாடகை தொகை வசூல் செய்யப்பட்டது. மேலும் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு அவர்கள் பூட்டி ‘‘சீல்’’ வைத்தனர்.

Next Story