மாவட்ட செய்திகள்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகைக்காக பெண் கொலை + "||" + Woman killed for jewelery near RS Mangalam

ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகைக்காக பெண் கொலை

ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகைக்காக பெண் கொலை
ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஓடக்கரை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காஞ்சனா(வயது 39).

இவர்களுக்கு அபிநயா(19), ஹரிகரன்(16) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் விறகு பொறுக்குவதற்காக காஞ்சனா ஊரின் அருகே கருவேல மரம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.


கொலை

ஆனால் மாலை 6 மணி வரை அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடிப்பார்த்துள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் காஞ்சனா கழுத்தில் சேலை இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையையும் காணவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து காஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்காக காஞ்சனா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்
திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
2. கூலிப்படையை ஏவி போலி டாக்டரை கொன்றது அம்பலம் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது
திருமங்கலம் அருகே போலி டாக்டர் கொலை வழக்கில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கடனை திருப்பி செலுத்தாததால் ஏற்பட்ட தகராறில் கூலிப்படையை ஏவி அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
3. பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவர் கைது பரபரப்பு வாக்குமூலம்
அரகண்டநல்லூர் அருகே பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
4. 2 குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை: சமையல் தொழிலாளி கைது
வேலைக்கு செல்லும்படி மனைவி கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த சமையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
5. சிறுவனை கடத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு
கெலமங்கலத்தில் சிறுவனை கடத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.