மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பஸ் நிலையங்கள்-அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு + "||" + Antiseptic spray at bus stations-government offices to prevent transmission of coronavirus

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பஸ் நிலையங்கள்-அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பஸ் நிலையங்கள்-அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு
நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி கின்ஷால் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சி அனைத்து துறை அதிகாரிகளும், சுகாதார ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் ஆணையர் சரவணகுமார் கூறியதாவது:-

கிருமி நாசினி

பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் மாநகராட்சிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடக்கூடாது. ஒரு நாளுக்கு 15 முறை கை கழுவ வேண்டும். போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கேமரா மூலம் பொதுமக்கள் கூடினால் கண்காணிக்க வேண்டும். வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் செயல்பட அறிவுறுத்த வேண்டும்.

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள 14 பிறப்பு- இறப்பு அலுவலகங்கள், வரிவசூல் மையங்கள், 5 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சுத்தம் செய்வதற்கு தேவையான கிருமி நாசினி மருந்துகள் மற்றும் பிளச்சிங் பவுடர் போன்றவை இருப்பில் உள்ளது.

பஸ்களில் மருந்து தெளிப்பு

அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்கள் போன்றவற்றில் இருந்து தினமும் 908 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே 2 பஸ் நிலையங்களிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு ஷிப்டுகளாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு அனைத்து பஸ்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட வேண்டும். இன்று முதல் (அதாவது நேற்று) முதல் இந்தப்பணி முழுவீச்சில் நடைபெற வேண்டும். அதேபோல் அனைத்து டெப்போக்களுக்கும் சென்று பஸ் இருக்கைகள், ஜன்னல் கம்பிகள், படியில் ஏறி, இறங்கும் பகுதியில் உள்ள கம்பிகள் போன்றவற்றில் கிருமி நாசினி மருந்து தடவ வேண்டும்.

மாநகராட்சி பகுதியில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்றவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். வடசேரி சந்தை, கோட்டார் சந்தை போன்றவற்றில் மக்கள் அதிகமாக வந்து செல்வதால் அங்கு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவற்றில் கட்டி வைக்க வேண்டும். மாநகராட்சி சுகாதார ஊழியர்கள், கொசு ஒழிப்பு ஊழியர்கள் 1,225 பேருக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டம் முடிந்த பின்னர், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறை ஆகியவற்றில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்
புதுவையில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் நிவாரண உதவித்தொகையாக அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
2. மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு பழங்குடிகள் நலவாரிய அட்டை சங்க கூட்டத்தில் தீர்மானம்
மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு தமிழ்நாடு பழங்குடிகள் நலவாரிய அட்டை பெற்றுத்தந்திட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
4. 144 தடை உத்தரவால் பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம்; அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
5. காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது; வத்திராயிருப்பில் கடைகளில் கூட்டம் திரண்டிருந்தது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் காய்கறி வாங்கவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.