குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 19 March 2020 5:00 AM IST (Updated: 18 March 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாகையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அவுரித்திடல் அருகே தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரம்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் செய்யது அலி நிஜாம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அல் ஆதில், மாவட்ட பொருளாளர் சவுகத் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய கொடி

போராட்டத்தில் குடி யுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பபட்டன. இதில் திரளான பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை கையில் ஏந்தி கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். 

Next Story