மாவட்ட செய்திகள்

முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.25 கோடி மோசடி; முன்னாள் ராணுவ வீரர் கைது + "||" + Rs 25 crore fraud for claiming additional interest on investment; Former Army soldier arrested

முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.25 கோடி மோசடி; முன்னாள் ராணுவ வீரர் கைது

முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.25 கோடி மோசடி; முன்னாள் ராணுவ வீரர் கைது
முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.25 கோடி வசூலித்து மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கோவை,

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் மணி (வயது 44). முன்னாள் ராணுவ வீரர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரபலமான சிமெண்டு தொழிற்சாலையில் அதிகாரியாக வேலை செய்வதாகவும், அந்த தொழிற்சாலையில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ.22 ஆயிரத்து 500 ஆதாய தொகையும், குறிப்பிட்ட மாதத்துக்கு பின்னர் செலுத்திய முழு தொகையையும் திருப்பி தந்துவிடுவதாக பலரிடம் மணி கூறியதாக தெரிகிறது. இதேபோல் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறார்களோ அந்த அளவுக்கு அதிக வட்டி தரப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இதனை நம்பி கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த லாரா வின்னரசி (35) என்பவர் ரூ.5¼லட்சத்தை மூன்று தவணைகளில் முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு ஆதாய தொகையும், அவர் செலுத்திய தொகையையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதுகுறித்து லாரா வின்னரசி கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

ரூ.25 கோடி மோசடி

பொருளாதார குற்றப்பிரிவுபோலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தினார்கள். இதில், முன்னாள் ராணுவ வீரர் மணி, கர்நாடக மாநிலம் ஹூபிளி அருகே உள்ள சாமராஜங்கரா பகுதியை சேர்ந்த மஞ்சுநாதா(35) என்பவருடன் சேர்ந்து கொண்டு ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

முன்னாள் ராணுவ வீரரான மணி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள், முன்னாள்ராணுவ வீரர்களை அணுகி கூடுதல் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 500 பேரிடம் ரூ.25 கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் ஆன்லைன் மூலம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர் கைது

இதைத்தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி, கூட்டுசதி, முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ராணுவ வீரர் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மஞ்சுநாதாவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மோசடி பணத்தில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னாள் ராணுவ வீரர் மணியிடம் பணத்தை இழந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் தொடர்ந்து புகார் செய்துவருகிறார்கள்.இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் தொழிலாளி கொலையில் அண்ணன் கைது
கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் தொழிலாளி கொலை வழக்கில் அவருடைய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
2. திருபுவனையில் பயங்கரம்; தனியார் வங்கி ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை
திருபுவனையில் தனியார் வங்கி ஊழியர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசில் அவரது மைத்துனர் உள்பட 3 பேர் சிக்கினர்.
3. கூலித்தொழிலாளி அடித்துக்கொலை ; கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
காரைக்காலில், குடிநீர் மோட்டாரை இயக்குவதில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி; தம்பதி கைது
பண்ருட்டி அருகே விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
5. பண்ருட்டி அருகே பயங்கரம்: தந்தை அடித்துக் கொலை; கல்லூரி மாணவர் கைது
பண்ருட்டி அருகே தந்தையை அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-