திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்தது
திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்தது.
திருவாரூர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் தெற்குவீதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் முகமதுபாசீத் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோவை அப்பாஸ் கலந்து கொண்டு பேசினார். இதில் தெற்கு மாவட்ட தலைவர் மிஸ்கின், மாவட்ட பொருளாளர் முகமதுசலீம் மற்றும் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை கண்டித்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தினால் தெற்குவீதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story