மாவட்ட செய்திகள்

பொம்மிடி அருகே கிணற்றில் பெண் பிணம் சாவில் சந்தேகம் என தந்தை போலீசில் புகார் + "||" + The father complained to the police that the woman's body was found dead in a well near the toy

பொம்மிடி அருகே கிணற்றில் பெண் பிணம் சாவில் சந்தேகம் என தந்தை போலீசில் புகார்

பொம்மிடி அருகே கிணற்றில் பெண் பிணம் சாவில் சந்தேகம் என தந்தை போலீசில் புகார்
பொம்மிடி அருகே கிணற்றில் பெண் பிணமாக மிதந்தார். மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை ேபாலீசில் புகார் செய்துள்ளார்.
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ஜங்காலப்பட்டியை சேர்ந்தவர் தீர்த்தகிரி. பொக்லைன் டிரைவர். இவருடைய மனைவி பரணி (வயது27) இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தீர்த்தகிரி கோவையில் தாங்கி வேலை செய்து வருகிறார். இதனால் பரணி மாமியாருடன் வசித்து வந்தார்.


இந்தநிலையில் நேற்று காலை தீர்த்தகிரியின் தாயார் சின்னத்தாய் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் பரணி பிணமாக மிதந்தார். இதுகுறித்து சின்னத்தாய் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உறவினர்கள், கிராமமக்கள் திரண்டு வந்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடல் மீட்பு

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து பரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக பரணியின் தந்தை அண்ணாமலை பொம்மிடி போலீசில் புகார் செய்தார்.

இதனிடையே நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து பரணியின் உடலை ஜங்காலப்பட்டிக்்கு உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். அப்போது பரணியின் உடலை, தீர்த்தகிரி வீட்டு முன்பு தான் புதைக்க வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து இறந்த பெண்ணின் உடல் வீட்டில் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. பரணி கிணற்றில் குதித்து தற்ெகாலை செய்து கொண்டாரா?, அல்லது அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கை மதிக்காமல் தினமும் வெளியே சுற்றுகிறார்; தந்தை மீது மகன் புகார்
டெல்லியில் ஊரடங்கை மதிக்காமல் தினமும் வீட்டை விட்டு வெளியே செல்கிறார் என தந்தை மீது மகன் புகார் அளித்து உள்ளார்.
2. தாயிடம் கத்தியை காட்டி இளம்பெண்ணை கடத்தியதாக புகார்: கொளத்தூர்மணி உள்பட 4 பேர் மீது வழக்கு
தாயிடம் கத்தியை காட்டி இளம்பெண்ணை கடத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து கொளத்தூர் மணி உள்பட 4 பேர் மீது பவானி போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
3. ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக சினிமா நடிகர் உள்பட 2 பேர் மீது புகார்
சினிமா கூப்பனை கொடுத்து ரூ.6 லட்சம் மோசடி செய்த சினிமா நடிகர் உள்பட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், எலெக்ட்ரீசியன் மனு கொடுத்தார்.
4. கட்டப்பஞ்சாயத்து செய்வதில் போலீஸ் அதிகாரிகளுடன் தாதாக்கள் கூட்டு சட்டமன்ற மதிப்பீட்டு குழு புகார்
போலீஸ் அதிகாரிகளுடன் தாதாக்கள் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சட்டமன்ற மதிப்பீட்டு குழு புகார் தெரிவித்தது.
5. ஜவுளி நிறுவனம் நிலுவைத்தொகை வழங்காமல் மோசடி நூல் உற்பத்தியாளர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
பள்ளிபாளையத்தில் ஜவுளி நிறுவனம் நிலுவைத்தொகையை வழங்காமல் மோசடி செய்து இருப்பதாக நூல் உற்பத்தியாளர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தனர்.