திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 70 அரசு பஸ்கள் நிறுத்தம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி காரணமாக திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 70 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதுடன், பஸ்களில் பயணிகள் கைபிடிக்கும் இடங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக-கேரள சோதனை சாவடியில் டாக்டர்கள் கொண்ட குழுவினர் முகாமிட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னர் திருப்பூருக்கு அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக திருப்பூரில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
இதன்காரணமாக பஸ்கள் இயக்குவதும் நேற்று காலை முதல் குறைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து தினமும் 560 பஸ்கள் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலத்துக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், திருப்பூர் நகர பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக பஸ்களில் கூட்டம் குறைந்து இருப்பதால் கணிசமான அளவுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட 70 பஸ்கள் வருகிற 31-ந் தேதி வரை நிறுத்தப்படுகிறது. பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால் தேவைப்படும்பட்சத்தில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். திருப்பூர் மாநகரம் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.
அரசு பணிமனைகளில் டிரைவர், கண்டக்டர்கள் அறைகளில் கிருமிநாசினி வைக்கப்பட்டு கை கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் டிரைவர், கண்டக்டர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Tags :
Next Story