கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு; மாட்டுச்சந்தை ரத்து சாலைகள் வெறிச்சோடின

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் ஜவுளி, நகைக்கடைகள் அடைக்கப்பட்டன. மாட்டுச்சந்தையும் ரத்து செய்யப்பட்டது.
ஈரோடு,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி காணப்படுகிறது. இதன் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மாநில அரசும் தீவிரம் காட்டி வருகிறது. அரசின் உத்தரவின்பேரில் ஈரோட்டிலும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி முதல்கட்டமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோல் சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் ஆகியன மூடப்பட்டன.
கடைகள் அடைப்பு
பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவற்றை வருகிற 31-ந் தேதி வரை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, நேதாஜிேராடு, காவிரிரோடு ஆகிய இடங்களில் உள்ள பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் அனைத்தும் நேற்று முதல் அடைக்கப்பட்டன. கடைகளுக்கு முன்பு, “கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்படுகிறது” என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த கடைகள் திடீரென மூடப்பட்டதால், ஜவுளி, நகைகள் எடுக்க வந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே சமயம் ஒருசில சிறிய ஜவுளிக்கடைகள் ஆங்காங்கே திறந்து இருந்தன. எனவே அவர்கள் அந்த கடைகளுக்கு சென்று ஜவுளிகளை வாங்கினார்கள்.
மாட்டுச்சந்தை ரத்து
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடத்தப்பட்டு வந்த மாட்டுச்சந்தையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாட்டுச்சந்தை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், கடைகள், ஜவுளிச்சந்தை உள்ளிட்டன விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது. எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படும் மேட்டூர்ரோடு, சத்திரோடு, ஆர்.கே.வி.ரோடு, பெருந்துறைரோடு, காந்திஜிரோடு, காவிரிரோடு போன்ற முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்கள், ரெயில்களில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது.

Related Tags :
Next Story