மாவட்ட செய்திகள்

கடத்தூர் அருகே சோகம் 1½ வயது பெண் குழந்தையுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை போலீசார் விசாரணை + "||" + Police investigate suicide of mother with poisonous 1½-year-old girl near Kadathur

கடத்தூர் அருகே சோகம் 1½ வயது பெண் குழந்தையுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை போலீசார் விசாரணை

கடத்தூர் அருகே சோகம் 1½ வயது பெண் குழந்தையுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை போலீசார் விசாரணை
கடத்தூர் அருகே 1½ வயது பெண் குழந்தையுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தா.அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 28). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி பவளக்கொடி (24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ரித்வித்திகா (1½) என்ற பெண் குழந்தை இருந்தது.


நேற்று முன்தினம் மாயக்கண்ணன் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த பவளக்கொடி குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்துள்ளார்.

2 பேரும் சாவு

இதனால் தாயும், குழந்தையும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே தாய், குழந்தையை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு, தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தோற்றம் பற்றிய விசாரணை: சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
கொரோனா தோன்றியது குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சீனா கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
2. சேலத்தில் பரபரப்பு போதை ஊசி போட்ட சிறுவன் சாவு நண்பர்களிடம் போலீசார் விசாரணை
சேலத்தில் போதை ஊசி போட்ட சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அவனது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. சேலத்தில் உடல் எரிந்த நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
சேலத்தில் உடல் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. தனியார் நிறுவன ஊழியர் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலையா? போலீஸ் விசாரணை
வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் சாவில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.