திருப்பூர் மாவட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தகவல் தெரிவிப்பது அவசியம் - கலெக்டர் வேண்டுகோள்


திருப்பூர் மாவட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தகவல் தெரிவிப்பது அவசியம் - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 March 2020 10:30 PM GMT (Updated: 22 March 2020 11:42 PM GMT)

திருப்பூர் மாவட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கள் தகவலை கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிப்பது அவசியம் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நோய் வெளிநாட்டில் இருந்து பரவியதால் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த ஒரு மாதத்தில் திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பியவர்கள் யாராவது இருந்தாலும் அவர்கள் தாங்களாகவே முன்வந்து பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் அவசரகால கட்டுப்பாட்டு அறையை 0421 1077, 0421 2971199 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிப்பது அவசியம்.

சம்பந்தப்பட்டவர்களின் உடல்நலம் குறித்து அறிந்து தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்ட மக்கள் நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

Next Story