கொரோனா வைரசால் வங்கிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரியலூரில் உள்ள ஒரு வங்கியில் நேற்று முதல் வாடிக்கையாளர்கள் 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அரியலூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரியலூரில் உள்ள ஒரு வங்கியில் நேற்று முதல் வாடிக்கையாளர்கள் 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களின் பணிகள் முடிந்த பின்னரே மற்ற வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைக்காக வங்கிகளின் வளாகத்திலேயே காத்திருந்து பின்னர் வங்கிக்குள் சென்றனர். மேலும் சில வங்கிகளில் வங்கிக்கு வந்த அனைவரும் கிருமி நாசினியால் கைகளை கழுவிய பின்னரே அனுமதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினியால் கழுவினர். வங்கி ஊழியர்கள் அனைவரும் முககவசத்தை அணிந்து கொண்டு பணியாற்றினார். மேலும் அனைத்து வங்கிகளிலும் கிருமி நாசினி மற்றும் சோப்பு வைக்க வேண்டும். 3 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story