வங்கிகளுக்கு வருவதை வாடிக்கையாளர்கள் தவிர்க்கவேண்டும் அதிகாரி வேண்டுகோள்
வங்கிகளுக்கு வருவதை வாடிக்கையாளர்கள் தவிர்க்கவேண்டும் என்று வங்கியாளர் குழும ஒருங்கிணைப்பாளர் வீரராகவன் கூறியுள்ளார்.
புதுச்சேரி,
கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி வங்கிகள் வங்கிக் கிளைகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் கிருமிநாசினிகள் வைத்திருக்கவேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனை
ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். வங்கிகளில் பணம் டெபாசிட் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்குவது, காசோலை பெறுவது என்பன போன்ற பணிகளின்போது பாதுகாப்பு கருதி உரிய இடைவெளியை கையாள வேண்டும். வங்கிகளில் வாடிக்கையாளர் கூட்டம் கூடுவதையும் தவிர்க்கவேண்டும்.
வங்கிகள், ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story