மாவட்ட செய்திகள்

150 படுக்கைகள் தயார்: புதுச்சேரி மாநிலத்தில் 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் நாராயணசாமி தகவல் + "||" + 150 beds ready: 515 people isolated in Puducherry: Narayanasamy reports

150 படுக்கைகள் தயார்: புதுச்சேரி மாநிலத்தில் 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் நாராயணசாமி தகவல்

150 படுக்கைகள் தயார்: புதுச்சேரி மாநிலத்தில் 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் நாராயணசாமி தகவல்
கொரோனா வைரஸ் கிருமி தடுப்பு நடவடிக்கையாக 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் புதுச்சேரிக்கு 6 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வந்துள்ளனர். அவர்கள் 300 ஓட்டல்களில் தங்கி இருந்தனர். அவர்களில் 90 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டார்கள். வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டல்கள், அவர்களை உபசரித்த ஓட்டல் ஊழியர்கள் குறித்து காவல்துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.


தனிமையில் 515 பேர்

அதன்படி 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள னர். புதுவையில் யாராவது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இருந்தபோதிலும் பிற நோயாளிகளிடையே அச்சம் ஏற்படும் என்பதால் புதுவை பல் மருத்துவக்கல்லூரியில் 50 படுக்கைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் செய்துள்ளோம். மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் சம்பவம் பற்றி அவதூறு தகவல் சென்னையில், போலீஸ்காரர் பணி இடைநீக்கம் அதிரடி நடவடிக்கை
சாத்தான்குளம் சம்பவம் பற்றி முகநூலில் அவதூறு தகவல் வெளியிட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
2. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது நாராயணசாமி திட்டவட்டம்
மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
3. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 100 படுக்கைகள் கண்காணிப்பு அதிகாரி தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 100 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மகேசன் காசிராஜன் கூறினார்.
4. கொரோன பாதிப்பை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள் குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் நாராயணசாமி பேட்டி
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
5. அரியலூர் மாவட்டத்தில் 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை கண்காணிப்பு அதிகாரி தகவல்
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார்.