கொரோனா பீதிக்கு இடையே பிளஸ்–2 தேர்வு நிறைவடைந்தது குமரி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 823 பேர் எழுதினர்


கொரோனா பீதிக்கு இடையே பிளஸ்–2 தேர்வு நிறைவடைந்தது குமரி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 823 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 24 March 2020 11:00 PM GMT (Updated: 24 March 2020 2:11 PM GMT)

கொரோனா பீதிக்கு இடையே தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்–2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்தது.

நாகர்கோவில், 

கொரோனா பீதிக்கு இடையே தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்–2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்தது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்வை 20 ஆயிரத்து 823 பேர் எழுதினர்.

20,823 பேர் எழுதினர் 

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2–ந் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. இந்தநிலையில் நேற்று கொரோனா பீதிக்கு இடையே இறுதி தேர்வு நடந்தது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதையொட்டி, மாணவ– மாணவிகள் தேர்வு மையங்களுக்குச் சென்றடைய வசதியாக அரை மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கப்பட்டது. அதாவது வழக்கமாக காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டு, 10.15 மணிக்கு எழுத தொடங்குவார்கள். ஆனால் நேற்று 10.30 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டு 10.45 மணிக்கு எழுத தொடங்கினார்கள்.

வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடத்தேர்வுகள் நடந்தது. இந்த பாடங்களுக்கான தேர்வை எழுத 21 ஆயிரத்து 447 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 20,823 பேர் எழுதினர். இதனால் 624 பேர் ஆப்சென்ட் ஆகியிருந்தனர்.

‘செல்பி‘ எடுத்தனர் 

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் தேர்வை நிறைவு செய்த பிளஸ்–2 மாணவ, மாணவிகள் சந்தோசத்துடன் தேர்வறையை விட்டு வெளியே வந்தனர். பின்னர் மாணவ–மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு புறப்பட்டுச் சென்றனர். சில மாணவிகள் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை முகத்தில் தடவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் குழுவாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

முன்னதாக தேர்வு எழுதுவதற்கு வந்த மாணவ–மாணவிகள் அனைவருக்கும் அந்தந்த தேர்வு அறைகளுக்கு வெளியே கை கழுவும் திரவமும், தண்ணீரும் வைக்கப்பட்டு இருந்தது. எனவே மாணவ, மாணவிகள் கைகளை கழுவிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story