மாவட்ட செய்திகள்

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை + "||" + VIDEO: Victims of fraud raided a police station in Trichy

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை
திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மலைக்கோட்டை,

திருச்சி கோட்டை ஜான்தோப்பை சேர்ந்த ஒருவர் கடந்த பல வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் ஏலச்சீட்டில் கருவாட்டு பேட்டை, ஜான் தோப்பு, கமலா நேரு நகர், வடக்கு தாராநல்லூர், சின்ன செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பணம் செலுத்தி உள்ளனர்.


இந்த நிலையில் சீட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் அந்த நபர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காலை அந்த நபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த நபரை பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கோடிக்கணக்கான ரூபாய்...

போலீசார் விசாரணையில், 100-க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு பணம் செலுத்தி ஏமாந்ததும், சீட்டு நடத்தியவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் அந்த நபர், தான் திவால் ஆனதாக பணம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட் டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. குடியாத்தம் அருகே மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி
குடியாத்தம் அருகே மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.14¾ லட்சம் பண மோசடியில் ஈடுபட்டவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி புகார் மனு கொடுத்தார்.
2. வங்கியில் இருந்து பேசுவதாக ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3. உதவித்தொகை பெற்று தருவதாக விவசாயிகளிடம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மோசடி
விவசாயிகளிடம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மத்திய அரசின் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி சிலர் மோசடி செய்வதால் விவசாயிகள் உஷாராக இருக்கும்படி வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை செய்துள்ளார்.
4. பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை
பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் நடைபெறும் மோசடி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. காட்டுமன்னார்கோவில் அருகே, ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ரூ.47½ லட்சம் மோசடி செய்தவர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ரூ.47½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.