காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 9:10 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில்கொரோனாவைரஸ் தடுப்புஆலோசனை கூட்டம்நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில்கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகுறித்து காஞ்சீபுரம்மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பொன்னையா தலைமையில்ஆலோசனை கூட்டம்நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காகதமிழகமுதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில்உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின்நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவருகிற 31-ந்தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனாவைரஸ்தடுப்பு பணிகளுக்காக காஞ்சீபுரம்மாவட்டத்தில் பகுதிவாரியாக பிரிக்கப்பட்டுஒரு பகுதிக்கு ஒரு அரசு அலுவலர், ஒரு போலீஸ், சுகாதாரத்துறை ஊழியர்ஆகியோர் கொண்டகுழுஅமைக்கப்பட்டு பகுதிவாரியாக காஞ்சீபுரம்மாவட்டத்திலுள்ளஅனைத்து பகுதிகளும்கண்காணிக்கப்பட வேண்டும்.

காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டசிறப்பு பிரிவுகள்ஏற்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆஸ்பத்திரிகளுக்கு வரும்நோயாளிகளுக்கு கை கழுவும்திரவம்கொண்டு கைகள்சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் குழுவினர் கண்காணிக்க வேண்டும்.

இந்தநடைமுறைகளை தனியார்ஆஸ்பத்திரிகளும் பின்பற்ற வேண்டும்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள்அத்தியாவசிய தேவைகளுக்குவெளியே வரும்பொழுது அனைத்து இடங்களிலும் கடைகளிலும்கட்டாயமாக சமூகஇடைவெளியை பின்பற்றப்படுவதை கண்காணிக்கவும்பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும்ஏ.டி.எம்.மையங்கள் மூலம் பணம் எடுக்க வரும் பொதுமக்களும்கை கழுவும்திரவத்தால் சுத்தம்செய்திடவும், இடைவெளியில் நிற்பதையும், எந்திரத்தில் கிருமிநாசினி தெளித்திடும்பணிகளை கண்காணித்திடவேண்டும்.

பொதுமக்கள் தங்களதுகைகளை சுத்தமாக கழுவிமற்றும்சுற்றுப்புறத்தை சுத்தமாகவைத்துக்கொள்வதன் மூலமாகவும், திரளாக மக்கள்கூடுவதை தவிர்ப்பதன்மூலமாகவும்கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்க இயலும். எனவே தமிழக அரசின் சீரிய முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளுக்கு கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக செயல்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில்மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி,சப்-கலெக்டர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story