கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு - நவாஸ்கனி எம்.பி. தகவல்


கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு - நவாஸ்கனி எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 27 March 2020 3:00 AM IST (Updated: 27 March 2020 2:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோய் தடுப்பு சிகிச்சைக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வதாக நவாஸ்கனி எம்.பி. அறிவித்துள்ளார்.

பனைக்குளம், 

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு பகுதியாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வரை கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை, தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கான உபகரணங்கள் வாங்க மாவட்ட நிர்வாகத்தின் தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளேன்.

இந்த பெரும் அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வண்ணம் நாடாளுமன்ற உறுப்பினராக மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் தர தயாராக உள்ளேன்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாதிப்பு பெருமளவில் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையுடன் மக்கள் நடந்து கொள்ள வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து விதமான உதவிகளையும் அரசு செய்து வருகிறது.இந்த நோய் முற்றிலுமாக அகற்றப்படும் வரை அனைவரும் இணைந்து போராடுவோம். இந்த பேரிடரில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story