ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 150 குடும்பங்களை சேர்ந்த 454 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  150 குடும்பங்களை சேர்ந்த 454 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 27 March 2020 3:45 AM IST (Updated: 27 March 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 150 குடும்பங்களை சேர்ந்த 454 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஈரோடு, 

கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வெளிநாட்டில் இருந்து மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் குறித்து பட்டியல் எடுத்து அவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து பலர் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து உள்ளனர். அவ்வாறு வந்தவர்களை சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் கண்டுபிடித்து அந்தந்த பகுதியில் தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

அதன்படி கோபி பகுதியில் 35 குடும்பங்களை சேர்ந்த 105 பேர், அந்தியூர் பகுதியில் 35 குடும்பங்களை சேர்ந்த 125 பேர், டி.என்.பாளையம் பகுதியில் 17 குடும்பங்களை சேர்ந்த 35 பேர், அம்மாபேட்டை பகுதியில் 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர், சத்தியமங்கலத்தில் 60 குடும்பங்களை 180 என மொத்தம் 454 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story