ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பெண் சாவு


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பெண் சாவு
x
தினத்தந்தி 1 April 2020 3:00 AM IST (Updated: 31 March 2020 11:50 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்தார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 61 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொரோனா அறிகுறியுடன் அந்த வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு மூச்சு திணறலும் இருந்ததாக தெரிகிறது.

தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென்று அந்த பெண் பரிதாபமாக இறந்துபோனார். அவரின் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவு வரும் முன்னரே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவிடம் கேட்டபோது, அந்த பெண்ணுக்கு வேறு சில உடல் பாதிப்புகள் இருந்துள்ளது. இதனால் அவர் கொரோனா தொற்றால் இறந்ததாக கூற முடியாது. ஏனெனில் அவரின் ரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. அதுவந்த பின்னரே எதுவும் உறுதியாக கூறமுடியும்” என்றார்.

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் இறந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story