பெதப்பம்பட்டியில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் கூட்டம் சமூக விலகலை கடைபிடிக்காததால் அச்சம்
பெதப்பம்பட்டியில் மீன்கள் வாங்குவதற்காக கூடிய பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை.
குடிமங்கலம்,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடுமுழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சந்தைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. இருந்தபோதிலும் பலஇடங்களில் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவது இல்லை.
பெதப்பம்பட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் மீன்களை வாங்கி சென்றனர்.
எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு வரும் மக்களை கருத்தில் கொண்டு சமூக விலகலை கடைபிடிக்காதவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story