நாமக்கல் மாவட்டத்திற்கு கொரோனாவை கண்டறிய 900 துரித பரிசோதனை கருவிகள் ஒதுக்கீடு
நாமக்கல் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக கொரோனாவை கண்டறிய 900 துரித பரிசோதனை கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
நாமக்கல்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தடுப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பை கண்டறிய துரித பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இந்த கருவிகள் முதல் கட்டமாக 900 ஒதுக்கீடு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த துரித பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவது குறித்து நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
இந்த பயிற்சி வகுப்புக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் தலைமை தாங்கி, கருவிகளை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் துரித பரிசோதனை கருவிகள் மூலம் முதல்கட்டமாக நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 9 இடங்களில் பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களில் யாருக்காவது அறிகுறி இருந்தால் அவர்களுக்கு முதலில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதேபோல் ஆஸ்பத்திரிக்கு சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கும், சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய அறிகுறி உள்ள நபர்களுக்கும் துரித பரிசோதனை கருவிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம்.
இந்த துரித பரிசோதனை கருவியில் கொரோனா இல்லை என முடிவு வந்தால் அவருக்கு கொரோனா இல்லை என்று கூறி விட முடியாது. பி.சி.ஆர். சோதனை முடிவே உறுதியானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவே இந்த துரித பரிசோதனை கருவி பயன்படுத்தப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

Related Tags :
Next Story