கோவில்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 23 April 2020 4:15 AM IST (Updated: 22 April 2020 11:33 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி, 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், முக கவசம் உள்ளிட்ட நிவாரண பொருட்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முன்னதாக கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம், வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளுக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். 

கம்மவார் உலக அறக்கட்டளை சார்பில் ரமேஷ், ராம்குமார் ஆகியோர் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினர்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், என்ஜினீயர் கோவிந்தராஜ், சுகாதார அலுவலர் இளங்கோ, யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகம், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், உறைவிட மருத்துவர் பூவேசுவரி, டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ், சித்த மருத்துவர் அபிநயா, யூனியன் தலைவி கஸ்தூரி, துணை தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story