கள்ளக்குறிச்சியில் , இறைச்சி கடைக்கு ‘சீல்’


கள்ளக்குறிச்சியில் , இறைச்சி கடைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 25 April 2020 10:15 PM GMT (Updated: 26 April 2020 12:19 AM GMT)

கள்ளக்குறிச்சியில் இறைச்சி கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கச்சிராயப் பாளையம் சாலையில் ஜான்பாஷா என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழிக் கறியை விற்பனை செய்து வந்தார். இதனால் இக்கடை யில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இவரது கடையில் ஒரு வாரத்திற்கு முந்தைய இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் சுகாதாரமற்ற முறையில் வைத்து விற்பனை செய்வதாக நகராட்சி அதிகாரிக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் பணியாளர்கள் நேற்று அந்த கறிக்கடையில் திடீரென சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெட்டப்பட்ட சுமார் 200 கிலோ எடையுள்ள ஆட்டிறைச்சி, ஆட்டு தலை, மூளை, குடல் மற்றும் கோழிக்கறி குளிர்சாதன பெட்டியில் சுகாதாரமற்ற முறையில் நோய் தொற்று ஏற்படும் வகையில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அந்த குளிர்சாதன பெட்டிகளையும் பறிமுதல் செய்து நகராட்சி வாகனத்தில் ஏற்றினார்கள். பின்னர் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இது கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story