ராஜபாளையம் அருகே பரபரப்பு: துப்பாக்கி-17 தோட்டாக்களுடன் வாலிபர் கைது


ராஜபாளையம் அருகே பரபரப்பு: துப்பாக்கி-17 தோட்டாக்களுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 April 2020 10:45 PM GMT (Updated: 26 April 2020 10:22 PM GMT)

ராஜபாளையம் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் சாராயம் காய்ச்சிய வாலிபரை துப்பாக்கி மற்றும் 17 தோட்டாக்களுடன் போலீசார் கைது செய்தனர்.

தளவாய்புரம், 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் அணை பகுதியில் கோவிலூரை சேர்ந்த சசி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.

இதனை கடந்த 8 மாதத்திற்கு முன்பு ராஜபாளையம் பெரியகடை பஜார் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் அய்யர் (வயது28) குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த நிலையில், அங்கு சாராயம் காய்ச்சுவதாக சேத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சியது தொடர்பாக அந்த வாலிபரை சுற்றி வளைத்தனர்.

மேலும் அங்கு சோதனை செய்ததில் நாட்டு துப்பாக்கி, 17 தோட்டாக்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அய்யரை கைது செய்ததுடன், அங்கிருந்த 80 லிட்டர் சாராய ஊறலையும் அழித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story