கொரோனாவை அழிப்பது போன்று ரெயில் வடிவில் ஆடை வடிவமைப்பு: நிப்ட்-டீ கல்லூரி மாணவி அசத்தல்


கொரோனாவை அழிப்பது போன்று ரெயில் வடிவில் ஆடை வடிவமைப்பு: நிப்ட்-டீ கல்லூரி மாணவி அசத்தல்
x
தினத்தந்தி 28 April 2020 1:26 AM IST (Updated: 28 April 2020 1:26 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை அழிப்பது போன்று ரெயில் வடிவில் நிப்ட்-டீ கல்லூரி மாணவி அசத்தலான ஆடை வடிவமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

திருப்பூர், 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வருகிற 2022-ம் ஆண்டு திருப்பூர் தொழில்துறையினர் ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கை எட்ட முடியாது என கவலை அடைந்து உள்ளனர்.

தற்போது தொழில்துறையினர் நம்பிக்கையளிக்கும் வகையில் நிப்ட்-டீ கல்லூரி மாணவி அசத்தலான ஆடை வடிவமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து நிப்ட்-டீ கல்லூரி அப்பேரல் பேஷன் டிசைனிங் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி திவ்ய தாரணி கூறியதாவது:-

திருப்பூர் தொழில்துறையினரை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு ஆடை வடிவமைப்பை உருவாக்க நினைத்தேன். அதன்படி திருப்பூரில் இருந்து ஒரு ரெயில் புறப்படுகிறது. ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கை அடையவும், கொரோனா வைரசை அழிக்கவும் என்ற கருத்தை கொண்டு இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரெயில் பெட்டியில் நூல் மற்றும் நிட்டிங் செய்வது குறித்த தகவல், சாயமேற்றுவது, ஆடை பிரிண்டிங், தையல் இதன் பின்னர் ஏற்றுமதியை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெயில் பாதையாக நிட்டிங் செய்த பின்னர் துணிகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ரெயில் கொரோனா வைரஸ் மீது அந்த வைரஸ் இறக்கும் வகையில் காட்சிபடுத்தியுள்ளேன். தொடர்ந்து ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கை ரெயில் சென்றடைகிறது. வங்கி உள்ளிட்டவைகளின் சின்னங்களின் ஓவியங்களும் ஆங்காங்கே வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story