உடல்நிலை பாதித்த தாயை பார்க்க குஜராத்தில் இருந்து வத்திராயிருப்புக்கு மோட்டார் சைக்கிளில் வந்த என்ஜினீயர்


உடல்நிலை பாதித்த தாயை பார்க்க குஜராத்தில் இருந்து வத்திராயிருப்புக்கு மோட்டார் சைக்கிளில் வந்த என்ஜினீயர்
x
தினத்தந்தி 28 April 2020 5:16 AM IST (Updated: 28 April 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

உடல்நிலை பாதித்த தாயை பார்ப்பதற்காக என்ஜினீயர் ஒருவர் குஜராத்தில் இருந்து 2,350 கி.மீ. பயணம் செய்து வத்திராயிருப்பு வந்துள்ளார்.

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து தனியாக அங்கு வசித்து வருகிறார். இவரது தாயார் கஸ்தூரி வத்திராயிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சந்திரமோகனுக்கு தகவல் வந்தது. ஊரடங்கு உத்தரவால் பொதுபோக்குவரத்து முற்றிலும் தடைபட்டதை தொடர்ந்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆமதாபாத்தில் இருந்து 2,350 கி.மீ. பயணம் செய்து வத்திராயிருப்பு வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால் நான் ஊருக்கு வருவதற்காக ஆமதாபாத்தில் உள்ள கலெக்டரிடம் அனுமதி கேட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரை வந்தடைந்தேன். மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் எனக்கு காய்ச்சல் உள்ளதாக என பரிசோதனை செய்த பின்னரே என்னை அனுமதித்தனர் என்றார். இதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவரை பரிசோதனை செய்து வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.

Next Story