7 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு ஒருவர் கைது


7 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு ஒருவர் கைது
x
தினத்தந்தி 29 April 2020 7:01 AM IST (Updated: 29 April 2020 7:01 AM IST)
t-max-icont-min-icon

7 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு ஒருவர் கைது.

திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூரை அடுத்த வீரபாண்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 4 பேரில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததோடு அங்கு பேரல்களில் இருந்த 1,000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 50 கிலோ வெல்ல மூட்டைகள் ஆகியவற்றை கைப்பற்றினர். இதில் சாராய ஊறலை அந்த இடத்திலேயே கீழே ஊற்றி அழித்தனர். மேலும் தப்பி ஓடிய அதே கிராமத்தை சேர்ந்த முனியப்பன், ஆறுமுகம், சக்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் கல்வராயன்மலை வனப்பகுதியில் பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி, கீழே கொட்டி அழித்தனர்.


Next Story