சமுதாய உணவகம் அமைக்கக்கோரி கோரிக்கை அட்டை ஏந்தி மக்கள் போராட்டம்


சமுதாய உணவகம் அமைக்கக்கோரி கோரிக்கை அட்டை ஏந்தி மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 April 2020 8:49 AM IST (Updated: 29 April 2020 8:49 AM IST)
t-max-icont-min-icon

சமுதாய உணவகம் அமைக்கக்கோரி கோரிக்கை அட்டை ஏந்தி மக்கள் போராட்டம்.

தேனி,

தேனி அல்லிநகரம் பகுதியில் பல்வேறு தெருக்கள் கொரோனா பாதிப்பு எதிரொலியாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அல்லிநகரம் புத்தர் தெருவை சேர்ந்த மக்கள் நேற்று தங்களின் வீடுகளின் முன்பு கோரிக்கை அட்டைகள் ஏந்தி நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மா உணவகத்தில் இலவசமாக மக்களுக்கு உணவு வழங்குவது போல், இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலன் கருதி குடியிருப்பு பகுதியிலேயே சமுதாய உணவகம் அமைத்து மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 மாதம் ரேஷன் பொருட்களை உடனே வழங்க வேண்டும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், கொரோனா பாதிப்பு காலத்தில் மின்கட்டணம், கேபிள் டி.வி. கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தியபடி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடம் அடையாள போராட்டம் நடத்திவிட்டு மக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்குள் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story