அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த செவிலியர்கள் தங்க இடமின்றி தவிப்பு
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த செவிலியர்கள் தங்க இடமின்றி தவிப்பு.
அடுக்கம்பாறை,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 350 படுக்கையில் உள்ள சிறப்பு தனி வார்டில் மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து 7 நாட்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
பின்னர் அவர்கள் காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை முடிந்த பின்னரே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். நேற்று மதியம் பணியை முடித்த செவிலியர்கள் பஸ் மூலம், தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் பல்கலைக்கழக விடுதிக்கு சென்றனர். அங்குப் பணியில் இருந்த காவலர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கவில்லை எனக் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து செவிலியர்கள் அனைவரும் மீண்டும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பஸ் ஓட்டுனர் அழைத்து வந்து விட்டு சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து செவிலியர்கள் எங்குச் செல்வது எனத் தெரியாமல் நேற்று இரவு 9.30 மணி வரை நடுரோட்டிலேயே தவித்தனர். செவிலியர்கள் நடுரோட்டில் நிற்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகம், செவிலியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும் நேற்று இரவு ஒரு நாள் மட்டும் அவர்கள் தங்குவதற்கு, தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது. செவிலியர்கள் தங்குவதற்கு போதுமான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story