திருப்பூரில் இருந்து ரெயில் மூலமாக கேரளாவுக்கு 4 லட்சம் முககவசம்
திருப்பூரில் இருந்து ரெயில் மூலமாக 4 லட்சம் முககவசம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர்,
ஊரடங்கு காலத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப்பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக சென்னை-சொரனூர் வரை சிறப்பு பார்சல் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் சொரனூரில் இருந்து நேற்று அதிகாலையில் புறப்பட்ட ரெயில் காலை 6.45 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தது.
திருப்பூரில் இருந்து சென்னைக்கு 50 ஆயிரம் முககவசம் 11 பண்டல்களில் அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோல் சென்னையில் இருந்து சொரனூர் நோக்கி சென்ற ரெயில் நேற்று மாலை திருப்பூர் வந்தது. இந்த ரெயிலில் 86 பண்டல்களில் 4 லட்சம் முககவசம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை திருப்பூர் ரெயில் நிலைய வணிகப்பிரிவு மேலாளர் முத்துக்குமார் தலைமையில் ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story