கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவரும் திண்டுக்கல்: 90 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
90 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியதோடு, ஒரு வாரமாக புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் மீண்டுவருகிறது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் புதுடெல்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், வங்காளதேசத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா பாதித்தது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 80 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதையடுத்து கொரோனா பாதித்த 80 பேரும், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு கொரோனா தனிவார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தொடர் சிகிச்சையால் பலர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
90 சதவீதம் பேர் குணமடைந்தனர்
அந்த வகையில் நேற்று முன்தினம் வரை பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் உள்பட மொத்தம் 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர்கள் 14 நாட்களுக்கு வெளியே செல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேநேரம் ஒரு முதியவர் மட்டும் இறந்து விட்டார். மீதமுள்ள 7 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருசில நாட்களில் அவர்களும் வீடு திரும்புவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே திண்டுக்கல், பழனி, நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர் உள்பட கொரோனா பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தினமும் ஆய்வு செய்கின்றனர். மேலும் தினமும் 80-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கடந்த ஒரு வாரமாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
மீண்டுவரும் திண்டுக்கல்
இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் மீண்டுவருகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் தற்போது சிவப்பு பகுதியாக உள்ளது. ஆனால், தொடர்ந்து 14 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படாவிட்டால் ஆரஞ்சு பகுதியாக மாற்றப்படும்.
அதுவே 28 நாட்களுக்கு புதிதாக தொற்று ஏற்படாவிட்டால் பச்சை பகுதியாக மாறும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஆரஞ்சு பகுதியாக மாறுவதற்கு, இன்னும் ஒருவாரம் இருக்கிறது. அதுவரை புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படக்கூடாது என்பது அனைவரின் வேண்டுதலாக உள்ளது.

Related Tags :
Next Story