தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 202 பேர் கைது - 70 வாகனங்கள் பறிமுதல்
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 202 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 70 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி,
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஊரடங்கை மீறி தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குபதிவு செய்தனர். தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் நேற்று இரவு வரை 202 பேர் கைது செய்யப்பட்டனர். 70 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையின்போது சாராயம் காய்ச்சியது தொடர்பாக 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 52 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story