கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை வேரோடு மரம் சாய்ந்தது


கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை வேரோடு மரம் சாய்ந்தது
x
தினத்தந்தி 3 May 2020 4:47 AM IST (Updated: 3 May 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை வேரோடு மரம் சாய்ந்தது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மேல்மலை பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. கொடைக்கானலில் இருந்து பாம்பார்புரம் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்லும் மலைப்பாதையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவ்வழியாக வந்த வாகனங்கள் அப்சர்வேட்டரி வழியாக திருப்பி விடப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் ஜாபர் தலைமையிலான வனத்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதற்கிடையே நேற்று மதியம் 2 மணிக்கு மேல் நகரின் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

Next Story