ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே நல்லூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், மாவட்ட பால்வள கூட்டுறவு சங்க தலைவருமான பச்சமுத்து தலைமை தாங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 500 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பை வழங்கினார். இதில் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் தங்கராசு, கூட்டுறவு சங்க தலைவர்கள் கருப்பையா, டென்சிங், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவகுமார், மனோகரன், கிளை செயலாளர் பழனிச்சாமி, ஊராட்சி செயலாளர் நாகராஜன், பாலு, வேல்முருகன், வெங்கடேசன், அர்ஜுனன், ராமசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கதுரை, ஊராட்சி செயலாளர் பூமாலை, ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருத்தாசலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு விருத்தாசலம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் மங்களம் அப்பாஸ் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி தலைவர் பாபுகணேஷ் முன்னிலை வகித்தார். இதில் முகாம்களில் வசித்து வரும் 90-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் குடும்பத்திற்கு அரிசி, காய்கறிகள், பிரட் உள்ளிட்ட நிவாரண உதவியை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்.
குமராட்சி
குமராட்சி ஒன்றியம் தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கு.சவுந்தரராஜன் தனது சொந்த செலவில் 500 குடும்பத்திற்கு மதிய உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர், வார்டு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், வெண்ணிலா, மேகலா, கவிதா, சிவனேசன், சமூக ஆர்வலர் குணால் உள்பட ஊராட்சி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ரோட்டரி சங்கம்
விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் இலங்கை அகதிகள் முகாமில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ரோட்டரி சங்க தலைவர் தீபக்சந்த் தலைமை தாங்கி இலங்கை அகதிகளுக்கு கோதுமை மாவு, பிஸ்கட் மற்றும் முககவசங்கள் வழங்கினார். இதில் செயலாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் அமீருதின், சாமுவேல் கென்னடி, ஜாகீர் உசேன், சி.என்.சி. கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் ஒன்றியம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் விஜய் தலைமை தாங்கினார். மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர், பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். முன்னதாக விருத்தாசலம் பகுதியில் 500 பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய பொருளாளர் விஜய்கந்தவேல், ஒன்றிய துணை தலைவர் சுரேந்தர், இளைஞரணி தலைவர் வேலையன், இளைஞரணி பொருளாளர் அய்யப்பன், தொண்டரணி தலைவர் சூர்யா, ஒன்றிய மாணவரணி தலைவர் விஜய், ஒன்றிய நிர்வாகிகள் ஹரி, பிரபு, சிவகண்டன், மாரி, முத்து, சதீஷ், அப்பு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story