கடலூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் கடலூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து மாவட்டத்திற்குள் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் தற்போது பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடலூர் அருகே நடுவீரப்பட்டு பகுதிக்கு கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று யாரேனும் கடலூர் நகரப்பகுதிக்கும் வந்து இருப்பார்களா? என்கிற அச்சம் நிலவி வருகிறது.
கிருமிநாசினி தெளிப்பு
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடலூர் நகரில் கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்தது. கடலூர் நகராட்சி சார்பில் நகரப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இப்பணியை நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி தலைமையில் நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்
இதேபோல் கடலூர் பாதிரிக்குப்பத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை நேற்று ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து மாத்திரைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரன் ,ஊராட்சி மன்றத் தலைவர் ஜல்லி சரவணன் ,துணைத் தலைவர் லட்சுமி ராமலிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் தெரிவியுங்கள்
இதனிடையே மாவட்ட நிர்வாகம் நோய் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த வகையில், தங்கள் பகுதிக்கு புதிதாக யாரேனும் வருகை தந்திருந்தால் அவர்களை பற்றி உடனடியாக மாவட்ட நிர்வாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 1077என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Related Tags :
Next Story