கடலூர் எம்.பி.க்கு கொரோனா பரிசோதனை தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது
பண்ருட்டியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சைக்காக பரிந்துரை கடிதம் கொடுத்த கடலூர் தி.மு.க. எம்.பி.க்கு கொரோனா பரிசோதனை நடந்தது. மேலும் அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி கொக்குப்பாளையத்தை சேர்ந்த 64 வயதான மூதாட்டி ஒருவர் வயிற்றுப்போக்கு பிரச்சினை தொடர்பாக ஜிப்மர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் ஜிப்மரில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த மகன், மருமகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் அவர்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூதாட்டியின் பேத்தியான 11 வயது சிறுமிக்கும் நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதியில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 17 பேர் கண்டறியப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.யிடம் பரிந்துரை கடிதம்
இதற்கிடையே, கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. உறுப்பினரான டி.ஆர்.வி.எஸ்.ரமேசை, மூதாட்டியின் மகன் சந்தித்தது தெரியவந்தது. அதாவது, டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் எம்.பி.யின் வீடு பண்ருட்டியில் உள்ளது. இந்த நிலையில், இவரை மூதாட்டியின் மகன் நேரில் சந்தித்து, தனது தாய்க்கு உடல் நலம் சரியில்லை. எனவே சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை கடிதம் கேட்டு வாங்கி சென்று இருப்பது தெரியவந்தது.
கொரோனா பரிசோதனை
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பண்ருட்டியில் உள்ள டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் எம்.பி.யின் வீட்டிற்கு மாவட்ட சுகாதார துறையினர் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவருக்கும், அவருடன் தொடர்பில் இருந்த 3 பேரின் ரத்த மாதிரி, உமிழ் நீர் ஆகியவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
தொடர்ந்து எம்.பி. உள்பட 4 பேரையும் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதார துறையினர் அறிவுறுத்தினர். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என கூறி, நகரசபை அதிகாரிகள் ரமேஷ் எம்.பி. வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் எம்.பி. யிடம் போனில் இது குறித்து விசாரித்தனர். அப்போது பரிசோதனை முடிவு நாளை (இன்று) வர உள்ளதாக அவர்களிடம் அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story