சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஏரியில் கும்பலாக மீன் பிடித்த கிராம மக்கள்


சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஏரியில் கும்பலாக மீன் பிடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 4 May 2020 5:25 AM GMT (Updated: 4 May 2020 5:25 AM GMT)

சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஏரியில் கும்பலாக மீன் பிடித்த கிராம மக்கள்.

செய்யாறு,

கொரோனா தொற்று நடவடிக்கையாக மக்கள் கும்பலாகச் சேர கூடாது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக விலகலை கிடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவம் சாப்பிட ஆசைப்பட்டு செய்யாறு தாலுகா காழியூரில் உள்ள ஏரியில் கிராம மக்கள் பலர் கும்பலாகச் சென்று மீன் பிடித்தனர்.

கொரோனா தாக்கத்தைத் துளியும் உணராமல், அதிகாரிகளின் எச்சரிக்கையை அலட்சியமாக கருதி, சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் கிராம மக்கள் கும்பல் கும்பலாகச் சென்று ஏரியில் மீன்களை பிடித்து தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

மேலும் செய்யாறு பகுதியில் உள்ள இறைச்சிக்கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஒருசில இடங்களில் மக்கள் யாரும் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் வந்து இறைச்சி வகைகளை வாங்கி சென்றனர். அதிலும் ஒருசிலர் கொரோனா தொற்றை பொருட்படுத்தாமல் தங்களின் குழந்தைகளுடன் இறைச்சிக்கடைகளுக்கு வந்ததை காணமுடிந்தது.


Next Story