கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 5 May 2020 1:07 AM GMT (Updated: 5 May 2020 1:07 AM GMT)

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 350 படுக்கை வசதிகள் உள்ள இந்த வார்டில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். அதன்படி இங்கு தற்போது 3 மாவட்டங்களைச் சேர்ந்த 10 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வீட்டில் இருப்பதைப்போல் அவர்களுக்கு போதுமான அனைத்து வசதிகளும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே, கொரோனா தொற்று குறித்து ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இவர்களை கல்லூரி டீன் செல்வி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்ளிட்டோர் நோய்களை கைதட்டி வழியனுப்பி வைத்தனர். மேலும் 7 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story