தர்மபுரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடைகளுக்கு ‘சீல்’


தர்மபுரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 6 May 2020 4:15 AM IST (Updated: 6 May 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வின்படி அனுமதிக்கப்பட்டவற்றில் பல கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இந்த நிலையில் தர்மபுரி எஸ்.வி. ரோடு பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடை, நாச்சியப்ப கவுண்டர் தெருவில் உள்ள ஒரு செல்போன் கடை ஆகியவற்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசங்கள் அணியாமலும் வாடிக்கையாளர்களை அனுமதித்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்திய தர்மபுரி உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் சுகுமார் மற்றும் வருவாய்த் துறையினர் அந்த 2 கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

Next Story