மாவட்ட செய்திகள்

பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தொழிற்சாலைகளை இயக்க அனுமதி கோரி விண்ணப்பம் + "||" + Application for permission to operate factories in panchayat and municipal areas

பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தொழிற்சாலைகளை இயக்க அனுமதி கோரி விண்ணப்பம்

பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தொழிற்சாலைகளை இயக்க அனுமதி கோரி விண்ணப்பம்
கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பெரிய தொழிற்சாலைகளை இயக்கக்கோரி ஏராளமானவர்கள் விண்ணப்பம் அளித்தனர்.
கோவை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தொழிற்சாலைகளை இன்று(புதன்கிழமை) திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்கள் இயங்க அனுமதி தேவையில்லை. ஆனால் பெரிய நிறுவனங்கள் அதாவது எந்திரங்கள் மீதான முதலீட்டுத் தொகை ரூ.10 கோடிக்கு மேல் இருந்தால் அவற்றை இயக்குவதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதி தேவை.


அந்த அனுமதியை பெறு வதற்காக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட தொழில் மையத்திற்கு நேற்றுக் காலை ஏராளமானவர்கள் படையெடுத்தனர். தொழிற் சாலைகளை இயக்குவதற்கான அனுமதியை ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண் டும். ஆனால் நேற்றுக்காலை அந்த இணையதளத்தில் கோளாறு இருந்ததால் அதில் விண்ணப்பிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து பெரிய தொழிற்சாலையை இயக்கு வதற்கான அனுமதி கோரி விண்ணப்பம் அளிப்பதற்காக பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நகர்ப்பகுதிகளில் அனுமதி கிடையாது

இதுகுறித்து மாவட்ட தொழில் மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தொழிற்சாலைகளை இயக்க அனுமதி கோரி இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதில் கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தொழிற்சாலை வைத்திருப்ப வர்கள் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்சாலை வைத்திருப்பவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு தொழிற் சாலையை இயக்க அனுமதி கிடையாது. இது தெரியாமல் பலர் ஆன்லைனில் விண்ணப் பித்துள்ளனர். அந்த விண்ணப் பங்கள் நிராகரிக்கப்படும்.

நிபந்தனைகள்

மேலும் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீத ஊழியர்களை கொண்டு இயக்க அனுமதி வழங்கப்படும். எத்தனை ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் என்பதை கணினி யே ஆய்வு செய்து அனுமதி வழங்கி விடும். 200 தொழி லாளர்கள் வரை வேலை செய்யும் தொழிற்சாலைகளில் 2 நாட்களுக்கு ஒரு முறை டாக்டர் வந்து பரிசோதனை நடத்த வேண்டும். 200 முதல் ஆயிரம் பேர் வரை வேலை செய்யும் தொழிற்சாலைகளில் ஒரு டாக்டர் அங்கேயே பணியமர்த்தப்பட வேண் டும்.

ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பணிகளை தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல கால்பந்து வீரர் டீகோ மரடோனா மருத்துவமனையில் அனுமதி
அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் டீகோ மரடோனா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2. இந்தியாவில் ரஷிய தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை அனுமதி கேட்டு விண்ணப்பம்
இந்தியாவில் ரஷிய தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 3-ம் கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கேட்டு டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
3. பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீது வழக்கு
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. புதிய நோயாளிகள் அனுமதிக்கு எதிர்ப்பு; பெண் மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள்
திரிபுராவில் புதிய நோயாளிகளை வார்டில் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் மருத்துவர் மீது கொரோனா நோயாளிகள் எச்சில் துப்பியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
5. கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தற்காலிக ரத்து
பெங்களூருவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.